மயிலாடுதுறையில் 30,000 ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம் - விவசாயிகள் கவலை

எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறையில் பெய்த கனமழையால் மாவட்டம் முழுவதும் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகத் துவங்கியுள்ளன. குறிப்பாக மயிலாடுதுறை தாலுகாவான அருண்மொழிதேவன், மகாராஜபுரம், பனையூர், கோட்டூர், மணலூர், ஆலங்குடி உள்ளிட்ட கிராமங்களில் ஐந்தாயிரம் ஏக்கரில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி அழுகத் துவங்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். வடிகால்வாய்களை தூர்வாராத காரணத்தாலும், வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தாததாலும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்த நிலையில் நெற்பயிர்கள் அழுகத் துவங்கியதால் என்ன செய்வது என தெரியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

Night
Day