மதுரை: 150-க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்ற ஜல்லிக்கட்டு காளை உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மாநகர் செல்லூர் அருகே 150-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்ற காளை உடல் நலக்குறைவால் உயிரிழந்தது. முடக்கத்தான் பகுதியில் மணி என்பவர் கடந்த 17 ஆண்டுகளாக வளர்த்து வந்த குட்டை என்ற காளை உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உட்பட 150-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெற்றது. இந்த நிலையில் சில நாட்களாக உடல் நலம் குன்றியிருந்த குட்டை காளை இன்று உயிரிழந்ததை அடுத்து காளையின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது அப்பகுதி மக்கள் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி ஒட்டியும், சிலம்பம் சுற்றியும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் காளையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

varient
Night
Day