மதுரை: வட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் ஆலோசனை கூட்டம் உதவி தேர்தல் அலுவலர் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது. கோட்டாட்சியர் சாந்தி தலைமை நடைபெற்ற கூட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்பு குழுவினர் எவ்வாறு செயல்பட வேண்டும். பறக்கும் படை, கண்காணிப்பு குழுவில் யாரெல்லாம் இருக்க வேண்டும் என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. திருமங்கலம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து கட்சி கொடிகள், விளம்பர தட்டி மற்றும் சுவரொட்டி விளம்பரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என கோட்டாட்சியர் தேர்தல் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருவாய் துறை அலுவலர்கள், நகராட்சி பொறியாளர், ஒன்றிய அலுவலர்கள் போலீசார் உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Night
Day