பெண்களை அவமதித்த பொன்முடிக்கு மீண்டும் பதவி

எழுத்தின் அளவு: அ+ அ-

பெண்கள் குறித்து ஆபாசமாக விமர்சித்த சர்ச்சையில் பதவி பறிக்கப்பட்ட பொன்முடிக்கு திமுக தலைமை மீண்டும் துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கி இருப்பது பெண்கள் மற்றும் அனைத்து தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

திமுகவின் முன்னாள் அமைச்சரும், முன்னாள் துணைப் பொதுச் செயலாளருமான பொன்முடி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றின், மேடையில், பெண்கள் குறித்தும், சைவம், வைணவம் குறித்தும் பேசியது அருவருக்கத்தக்க வகையில் இருப்பதாகவும், ஆபாசத்தின் உச்சம் என்றும் பெண்களின் மாண்பை களங்கப்படுத்துவதாக இருப்பதாகவும் கடும் விமர்சனங்கள் எழுந்தது. மேலும், இலவச பேருந்து திட்டத்தில் பெண்கள் ஓசியில் பயணம் செய்வதாக விமர்சித்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேடை நாகரீகமின்றி பெண்கள் குறித்து பொன்முடி அவதூறாக பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானதால் திமுக தலைமை அவரை அமைச்சர் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது. 

இந்நிலையில், பெண்கள் குறித்து அநாகரிகமாக பேசிய பொன்முடிக்கு திமுக தலைமை மீண்டும் துணைப் பொதுச்செயலாளர் பதவியை வழங்கியுள்ளது. இது பெண்கள் மற்றும் அனைத்து தரப்பினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் குறித்து தொடர்ந்து அவதூறு கருத்துக்களை கூறியதால் பதவி பறிக்கப்பட்டநிலையில், மீண்டும் பொன்முடிக்கு கட்சியில் பதவி வழங்கி இருப்பதை பார்க்கும் போது, வெறும் கண்துடைப்புக்காக மட்டுமே திமுக தலைமை நடவடிக்கை எடுத்திருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டுகின்றனர். இது திமுகவின் அவலநிலைக்கு மற்றொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.

Night
Day