கோவை சம்பவம் - 3 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன - காவல் ஆணையர் சரவணசுந்தர்

எழுத்தின் அளவு: அ+ அ-

கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு வந்த போது இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்தார். மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பிடிபட்ட குற்றவாளிகள் மீது கிணத்துக்கடவு காவல் நிலையத்தில்  கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார். மூன்று பேரும் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த பின்னர் இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

Night
Day