பெட்ரோல் ஏற்றி வந்த சரக்கு ரயில் டேங்கில் திடீரென கசிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெட்ரோல் ஏற்றி வந்த சரக்கு ரயில் டேங்கில் கசிவு ஏற்பட்டதால், சோழவந்தான் வழியாக செல்லக்கூடிய ரயில்கள் அரைமணி நேரம் தாமதமாக சென்றன. பெட்ரோல் ஏற்றி வந்த சரக்கு ரயில் சோழவந்தான் ரயில் நிலையம் வந்த போது, அதன் டேங்கில் கசிவு ஏற்பட்டதால், உடனடியாக ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இத்தகவல் ரயில்வே நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டு சோழவந்தான் வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், சோழவந்தான் தீயணைப்புத் துறையினர் மற்றும் ரயில்வே பொறியாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த உடனடியாக வந்த பொறியாளர்கள் பெட்ரோல் கசிவை சரிசெய்தனர். இதன் காரணமாக சோழவந்தான் வழியாக செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் அரை மணி நேரம் தாமதமாக சென்றன. 

Night
Day