புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கழக நிர்வாகிகள், தொண்டர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் 71வது பிறந்தநாளையொட்டி, கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஊடகத்துறையினர் உள்ளிட்டோர் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில், அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், ஊடகத்துறையினர், துப்பரவு பணியாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சந்தித்து பூங்கொத்துகள் வழங்கி பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும், வாழ்த்து மடல், புத்தகம், கோவில் பிரசாதம் உள்ளிட்டவற்றை புரட்சித்தாய் சின்னம்மாவிடம் வழங்கி ஆசி பெற்றனர். அப்போது, தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த குழந்தைகளுக்கு புரட்சித்தாய் சின்னம்மா தாயுள்ளத்துடன் சாக்லெட்கள் வழங்கி மகிழ்ந்தார். அதனைத் தொடர்ந்து அனைவரும் புரட்சித்தாய் சின்னம்மாவுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

ஜெயா தொலைக்காட்சி ஊழியர்களும், கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து பூங்கொத்துகள் வழங்கி பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். தொடர்ந்து புரட்சித்தாய் சின்னம்மாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். புரட்சித்தாய் சின்னம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர், புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதன்பின்னர், கழகத்தின் முக்கிய நிர்வாகிகளுடன், புரட்சித்தாய் சின்னம்மா கழகத்தின் அடுத்தக்கட்ட பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

Night
Day