புதுக்கோட்டை: மும்மதத்தினர் இணைந்து நடத்தும் ஜல்லிக்கட்டு போட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடப்பட்டது. திருநல்லூரில் மும்மதத்தினரும் இணைந்து நடத்தும் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 12-ஆம் தேதி நடைபெறுகிறது. போட்டிக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு தாரை தப்பட்டைகளுடன் முகூர்த்தக்கால் எடுத்துவரப்பட்டு பூஜை செய்து, போட்டி நடைபெறும் இடத்தில் நடப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

varient
Night
Day