பிரேக் பிடிக்காமல் விபத்துக்குள்ளான அரசுப்பேருந்து

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை எல்லீஸ் நகரில் பாலத்தில் இருந்து இறங்கிய மாநகரப் பேருந்து பிரேக் பிடிக்காமல் ஆட்டோக்கள் மீது மோதியதுடன், பாலத்தில் மீது மோதி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பெரியார் பேருந்து நிலையம் நோக்கி மாநகரப் பேருந்து வந்து கொண்டிருந்தது. எல்லீஸ்நகர் பாலத்தில் இருந்து கீழே இறங்கியபோது திடீரென பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பக்கவாட்டில் நிறுத்திவைத்திருந்த இரு ஆட்டோக்கள் மீது மோதியது. வேகம் குறையாத அரசுப்பேருந்து இறுதியாக பாலத்தின் சிமெண்ட் தடுப்புகள் மீது மோதி நின்றது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் சாலையோரம் பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்களும், பேருந்தில் பயணித்த பயணிகளும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். தமிழக போக்குவரத்து கழகத்தின் பெரும்பாலான பேருந்துகள் சீரமைக்கப்படாமல் காலாவதியான பின்னரும் தொடர்ந்து இயக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் அன்றாடம் உயிரை பணயம் வைத்து பயணிக்கும் அவலநிலை நிலவி வருகிறது. 

varient
Night
Day