பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே. மணியை மாற்றக்கோரி மனு

எழுத்தின் அளவு: அ+ அ-

 பாமக சட்டமன்ற குழு தலைவர் பொறுப்பிலிருந்து ஜி.கே.மணியை நீக்கிவிட்டு அன்புமணி ஆதரவு எம்எல்ஏவை நியமிக்க கோரி அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவை செயலாளரிடம் மனு அளித்துள்ளனர். 

பாமகவில் கடந்த சில நாட்களாக உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ள நிலையில், யாருக்கு அதிகாரம் என்பதில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கும் தலைவர் அன்புமணிக்கும் இடையே பனிப்போர் நீடித்து வருகிறது. இந்நிலையில், தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம், பாமகவின் சட்டமன்ற குழு தலைவராக உள்ள ஜி.கே. மணியை நீக்குவது தொடர்பாக அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில், பாமக சட்டமன்ற குழு தலைவராக உள்ள ஜி.கே.மணியை நீக்கிவிட்டு, எஸ்.பி.வெங்கடேஸ்வரனை நியமித்து இருப்பதாகவும், பாமகவின் கொறடா பதவியில் இருந்த எம்எல்ஏ அருள் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ஆதரவாளர் பாலு, அடுத்த மாதம் 14ஆம் தேதி சட்டப்பேரவை கூடும் பொழுது பாமக சட்டமன்ற குழு தலைவர் இருக்கையை அன்புமணி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.

Night
Day