பாஜகவில் இணையவுள்ள காங். எம்எல்ஏ விஜயதாரணி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி பாரதிய ஜனதா கட்சியில் இணைவது குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக உள்ள விஜயதாரணி, மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டியிடம் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. டெல்லியில் நடைபெற்று வரும் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தின்போது, விஜயதாரணி தன்னை பாஜகவில் இணைத்துக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Night
Day