பள்ளிகள் திட்டமிட்டபடி ஜூன் 2-ம் தேதி திறப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து திட்டமிட்டப்படி ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 

வெயிலின்  தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தென்மேற்கு பருவ மழை மற்றும் கோடை மழை காரணமாக தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இதையடுத்து பள்ளிகள் குறித்த நேரத்தில் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.  அனைத்து அரசு  மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை ஜூன் 2ம் தேதி திறக்க  தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Night
Day