பயிற்சி மருத்துவரை தாக்கியவரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி 200க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சிவகங்கை அரசு மருத்துவமனையில் கடந்த 28 ஆம் தேதி சிகிச்சைக்கு வந்தவரின் உறவினர் பயிற்சி மருத்துவரை தாக்கிய சம்பவம் தொடர்பாக புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்தும், தாக்கியவரை கைது செய்ய வலியுறுத்தியும் பயிற்சி மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தற்போது பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், சிகிச்சைக்கு வந்த புறநோயாளிகளும், சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Night
Day