எழுத்தின் அளவு: அ+ அ- அ
தங்கம் விலை ஒரு நாளில் சவரனுக்கு ஆயிரத்து 480 ரூபாய் உயர்ந்து 91 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது. ஜெட் வேகத்தில் தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சம் தொட்டுள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்றம் கண்டு வருகிறது. சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்த நிலையில் பிற்பகல் மேலும் 680 ரூபாய் அதிகரித்தது. ஒரே நாளில் 2 முறை ஏற்றம் கண்ட தங்கம் விலை சவரனுக்கு ஆயிரத்து 480 ரூபாய் உயர்ந்து 91 ஆயிரத்து 80 ரூபாய்க்கும், கிராமுக்கு 185 ரூபாய் அதிகரித்து 11 ஆயிரத்து 385 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு 3 ரூபாய் அதிகரித்து 170 ரூபாய்க்கும் கிலோவுக்கு 3 ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு வருவது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.