சணல், சாக்கு தட்டுப்பாடு - நெல் மூட்டைகள் தேக்கம் - புரட்சித்தாய் சின்னம்மா கண்டனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் சணல் மற்றும் சாக்கு தட்டுப்பாடு காரணமாக நெல் கொள்முதல் செய்யப்படாமல் லட்சக்கணக்கில் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி இருப்பது மிகவும் வேதனை அளிப்பதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். விவசாயிகள் கஷ்டப்பட்டு சாகுபடி செய்து, அறுவடை செய்த நெல் மூட்டைகளை உடனே கொள்முதல் செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும் என்றும் திமுக தலைமையிலான விளம்பர அரசை புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் இரவு நேரங்களில் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்துவரும் நிலையில், அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் சணல் மற்றும் சாக்கு தட்டுப்பாடு காரணங்களாலும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் தொடர்ந்து தேக்கமடைந்து வருவதினாலும், கடந்த பத்து நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படாமல் இலட்சக்கணக்கில் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி இருப்பது மிகவும் வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல், "தமிழகத்தை தலை குனிய விடமாட்டேன்" என நாள்தோறும் விளம்பரம் மட்டும் செய்து கொண்டிருக்கும் திமுக தலைமையிலான அரசை வன்மையாக கண்டிப்பதாகவும் புரட்சித்தாய் சின்னம்மமா குறிப்பிட்டுள்ளார். 

தமிழக காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூரில் ஒரு லட்சத்து 96 ஆயிரம் ஏக்கர், திருவாரூரில் ஒரு லட்சத்து 91 ஆயிரம் ஏக்கர், மயிலாடுதுறையில் 98 ஆயிரம் ஏக்கர், நாகையில் 89 ஆயிரம் ஏக்கர் என மொத்தம் 5 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு, கிட்டத்தட்ட 90 சதவீத அறுவடை பணிகளும் நிறைவுபெற்றுள்ளதாக விவசாயிகள் தெரிவிப்பதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

இதில் எஞ்சிய அறுவடை பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன - அறுவடை செய்யப்படும் நெல்மணிகளை சாலையில் காயவைத்து அதன் பின்னர் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனைக்காக விவசாயிகள் எடுத்து செல்கின்றனர் - ஆனால் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கடந்த 15 நாட்களுக்கு முன்பாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளே இன்னும் தேங்கி கிடக்கின்றன - அதாவது, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தற்போது சணல் மற்றும் சாக்கு பற்றாக்குறை நிலவி வருவதாக தெரியவருகிறது என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

குறிப்பாக திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளிலும், மீனம்பநல்லூர், உதயமார்த்தாண்டபுரம், தில்லைவிளாகம் உள்ளிட்ட பகுதிகளிலும், ஒரத்தநாடு, தென்னமநாடு உள்ளிட்ட பகுதிகளிலும் உள்ள பல நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் போதிய சணல் மற்றும் சாக்குகள் இல்லாத காரணத்தினால் நெல் கொள்முதல் செய்ய முடியாமல் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன என புரட்சித்தாய் சின்னம்மா கூறியுள்ளார்.

நெல் மூட்டைகள் கொள்முதல் நிலைய வாயில்களில் தலா 5 ஆயிரம் முதல் 15 ஆயிரம் சிப்பங்கள் வரை அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 10 ஆயிரம் மூட்டைகளுக்கு மேல் அறுவடை செய்த நெல்மூட்டைகள் கிராமங்கள் தோறும் சாலை ஓரங்களிலேயே கொட்டி வைத்து தார்பாய் போட்டு மூடி வைக்கப்பட்டுள்ளதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

இதன் காரணமாக சாலையில் வாகன போக்குவரத்திற்கும் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது என்றும், வாகன விபத்துகளும் தொடர்ந்து ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா கூறியுள்ளார்.

அதேபோன்று, மன்னார்குடி அருகே தேவங்குடியில் உள்ள அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் 10 நாட்களை கடந்தும் இன்னும் திறக்கப்படாமலே இருப்பதாக விவசாயிகள் சொல்லி மிகவும் வேதனைப்படுகின்றனர் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

மேலும், அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் ஒப்பந்த லாரிகள் சரிவர இயக்கப்படாமல் காலம் தாழ்த்துவதினாலும், கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள் அரவை ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்லமுடியாத நிலை ஏற்பட்டு, மாவட்டம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களிலும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை நெல்மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன - இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நெல்மூட்டைகள் நனைந்து சேதமடைந்து வருவதாக விவசாயிகள் வேதனை அடைகின்றனர் என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தமிழக விவசாயிகளும் தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியோடு பண்டிகையை கொண்டாடிடும் வகையில் நெல் கொள்முதலை காலதாமதமின்றி விரைந்து மேற்கொள்ளவேண்டும் என்றும், திமுக தலைமையிலான அரசு லாரி ஒப்பந்தத்தை ஒருவருக்கு மட்டுமே வழங்குவதை விட்டுவிட்டு, தகுதியான பலருக்கு கொடுத்து நெல் மூட்டைகளை விரைந்து சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்து செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார். 

அதேபோன்று, அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் உள்ள சணல் மற்றும் சாக்கு பற்றாக்குறையை உடனே சரி செய்யவேண்டும் என்றும், டெல்டா மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் அறுவடை செய்யப்பட்டு மழை நீரில் நனைந்துள்ள நெல் மூட்டைகளை 22 சதவீத ஈரப்பதம் வரை நிபந்தனையின்றி கொள்முதல் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.

தமிழக விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில்தான் நெல் சாகுபடி செய்து வருகின்றனர் - ஆனால், திமுக தலைமையிலான அரசு ஆண்டுதோறும் காவிரியில் ஜூன் மாதம் 12ஆம் தேதி தண்ணீர் திறந்து விட்டு, அதை விளம்பரம் செய்தால் மட்டும் போதாது என குறிப்பிட்டுள்ள அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, விவசாயிகள் கஷ்டப்பட்டு சாகுபடி செய்து, அறுவடை செய்த நெல் மூட்டைகளை உடனே கொள்முதல் செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசை வலியுறுத்தியுள்ளார்.

varient
Night
Day