பட்டியலின அலுவலரை தரையில் அமர வைத்து அவமதிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரத்தில் உள்ள மாவட்ட மைய நூலக அலுவலகத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஊழியரை கீழே அமரவைத்து பணி செய்ய வைக்கப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசமங்கலத்தில் கிளை நூலகராக பணியாற்றி வரும் சிவசங்கரி என்பவர், விடுமுறை கேட்டு விழுப்புரத்தில் உள்ள மாவட்ட மைய நூலக அலுவலகத்திற்கு சென்றுள்ளார். சிவசங்கரி பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை தரையில் அமர வைத்து விடுப்பு கடிதத்தை எழுதித் தரும்படி நூலக அலுவலக கண்காணிப்பாளர் வெங்கடேசன் கூறியுள்ளார். இவர் ஊழியர்களிடையே சாதிய பாகுபாட்டை கடைபிடித்து வருவதாக கூறப்படுகிறது. அரசு அலுவலகத்தில் சாதிய பாகுபாட்டை கடைபிடித்து ஊழியர்களை பிரிவினையோடு நடத்தும் நூலக அலுவலக கண்காணிப்பாளர் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Night
Day