சட்டம் ஒழுங்கு சரியில்லை, காவல்துறை முதலமைச்சர் கட்டுப்பாட்டில் இல்லை - பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, காவல்துறை முதலமைச்சர் கட்டுப்பாட்டில் இல்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை முகப்பேரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஏற்கனவே 24 லாக்கப் டெத் நடந்திருப்பதாகவும் அவை போலீசாரால் செய்யப்பட்ட படுகொலை என்றும் கூறினார்.  இவை அனைத்திற்கும் முதலமைச்சர் பொறுப்பேற்று முழுமையான நீதி விசாரணை வேண்டும் என்று வலியுறுத்திய நயினார் நாகேந்திரன், காவல்துறையை யார் யாரோ தலைமைச் செயலகத்தில் இருந்து இயக்கிக் கொண்டிருப்பதாக சாடினார்.

Night
Day