பட்டாசு நிறுவன உரிமையாளர்கள் வீடுகளில் 2-வது நாளாக ரெய்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகாசியில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் வீடுகள் உள்ளிட்ட ஏழு இடங்களில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பிரபல பட்டாசு தொழிற்சாலைகளான சோனி, காளீஸ்வரி நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள், உற்பத்தியாளர்களில் வீடுகள் மற்றும் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு  புகாரின் அடிப்படையில் நடைபெற்று வரும் சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது.

Night
Day