பட்டப்பகலில் இளைஞர் வெட்டி படுகொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல்லில் பட்டப்பகலில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமலைசாமிபுரத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரின் நண்பர் ஜெயபாண்டி போடிநாயக்கன்பட்டியில் வசித்து வருகிறார். இருவரும் ஜேசிபி, டிராக்டர் ஓட்டுனர்களாக இருந்து வருவதால், தொழில் ரீதியாக நட்பு ஏற்பட்டுள்ளது. நட்பின் காரணமாக கார்த்திக் ஜெயபாண்டி வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இந்நிலையில், ஜெயபாண்டி வீட்டில் கார்த்திக் படுகொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். தற்போது ஜெயபாண்டி தலைமறைவாக உள்ள நிலையில் அவரது மனைவி செல்வராணியை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day