அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து - 10 மாணவர்கள் காயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை சஞ்சீவி நகர் சிக்னலில் ஈச்சர் வாகனம் திடீரென நின்றதால் பின்னால் வந்த அரசு பேருந்தும் 2 கல்லூரி வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக மோதியதில் 12 கல்லூரி மாணவிகள் காயமடைந்தனர்.

திருச்சியில் இருந்து சென்னை நோக்கி ஈச்சர் வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது சஞ்சீவி நகரில் சிக்னல் சிகப்பு நிறத்திற்கு மாறியதால் அதிர்ச்சி அடைந்த ஈச்சர் வாகன ஓட்டுநர் சட்டென பிரேக் பிடித்து வாகனத்தை நிறுத்தியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத பின்னால் வந்த பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்துக்குள்ளான பேருந்துகளை அப்புறப்படுத்தினர். 

Night
Day