2 நாள் பயணமாக குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழகம் வருகை...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக வரும் 4ஆம் தேதி தமிழகம் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அன்றைய தினம் சென்னையில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் சார்பில் பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மறுநாள் 5-ம் தேதி கோவை செல்லும்  குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் முக்கிய பிரமுகர்கள் பலரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனின் தமிழக சுற்றுப்பயண திட்டம்  இன்னும் ஓரிரு நாட்களில் சுற்றுப்பயணத் திட்டம் இறுதி செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. குடியரசு துணை தலைவராக பதவியேற்றப்பிறகு சி.பி.ராதாகிருஷ்ணன் முதல் முறையாக தமிழகம் வருவது குறிப்பிடத்தக்கது. 

Night
Day