பசுக்களுக்கு சிறப்பு பூஜை செய்து மாட்டுப் பொங்கல் திருநாளை கொண்டாடிய அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழர் திருநாளாம் தைத்திருநாள், மாட்டுப் பொங்கல் தினத்தை முன்னிட்டு, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, பசுக்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்.  

சென்னையை அடுத்த பையனூரில் மாட்டுப் பொங்கல் திருநாளைக்  கொண்டாடிய அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். பையனூர் தோட்ட இல்லத்தில் பசுக்களுக்கு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சிறப்பு பூஜைகள் செய்தார். பசுக்களுக்கு ஆரத்தி எடுத்து பக்தியுடன் வழிபாடு நடத்தினார். பின்னர், பொங்கல், சர்க்கரை பொங்கல், இனிப்புகள், பழங்கள் உள்ளிட்ட சிறப்பு உணவுகளை பசுக்களுக்கு பக்தியுடன் வழங்கினார்.  இதனைத் தொடர்ந்து, "பொங்கலோ பொங்கல்" என முழக்கமிட்டு மாட்டுப்பொங்கலை வெகுவிமர்சையாக கொண்டாடிய புரட்சித்தாய் சின்னம்மா, தமிழக மக்கள் அனைவருக்கும் தனது இனிய மாட்டுப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Night
Day