நீலகிரி : பந்தலூர் பகுதியில் வீட்டிற்குள் உலா வந்த சிறுத்தை - குடியிருப்பு வாசிகள் அச்சம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே வீட்டு வளாகத்திற்குள் உலா வந்த சிறுத்தையால் அச்சம் ஏற்பட்டுள்ளது.

சேரங்கோடு பஜார் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வளாகத்திற்குள் நேற்றிரவு சென்ற சிறுத்தை அங்கிருந்த காரின் பின்னால் பதுங்கி கொண்டு, இரை ஏதாவது அகப்படுகிறதா? என நோட்டமிட்டது. தொடர்ந்து அங்கிருந்த நாய் குரைக்க தொடங்கவே, அந்த வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்ததும் சிறுத்தை அங்கிருந்து ஓடியது. இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

varient
Night
Day