நீலகிரி, கோவைக்கு இன்று 'மஞ்சள்' எச்சரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் கோவை மற்றும் திண்டுக்கல் மாவட்டத்திற்கு கனமழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஓரிரு இடங்களில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. 

நீலகிரி மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் கோவை மற்றும் திண்டுக்கல் மாவட்டத்திற்கு கனமழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கையும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Night
Day