எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கருக்கலைப்பு செய்த 17 வயது சிறுமி உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை சகோதரர் உறவு முறை கொண்ட சிறுவன் காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த சூழலில் சிறுமி 5 மாத கருவுற்றது பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனை ஏற்க மறுக்க சிறுமியின் பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமிக்கு கருக்கலைத்த போது சிறுமியின் உடல் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து சிறுமியை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கருக்கலைப்பு செய்த செவிலியர் வயலட் கனி மற்றும் ஹரிபாபு ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.