நாய் குறுக்கே வந்ததில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரோடு பெருந்துறையில் தெருநாய் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீதி மோதியதில் அடுத்தடுத்து வாகனங்கள் விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 
பெருந்துறை குன்னத்தூர் சாலையில் தெரு நாய்களின் எண்ணிக்கை  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் குன்னத்தூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் இருவர் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தெரு நாய் ஒன்று, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவரும் நிலைதடுமாறி சாலையில் விழுந்தனர். அப்போது, பின்னால் வந்து கொண்டிருந்த கார் மற்றும் தனியார் கல்லூரி பேருந்து, ஒன்றின் பின் ஒன்று மோதியது. விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. 

Night
Day