எழுத்தின் அளவு: அ+ அ- அ
நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்ததை தொடர்ந்து பேக்கரிகளில் கேக் விலை, காரம் விலை மளமளவென குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கேக் வகைகளுக்கு 18 சதவீதத்திலிருந்து 5% ஆக ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. எனவே கேக்கின் விலை ஒரு கிலோவுக்கு 100 ரூபாய் வரை குறைந்துள்ளது. இதேபோன்று காரம் வகைகளுக்கும் 12 சதவீதத்திலிருந்து 5% ஆக ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளதால் ஒரு கிலோவுக்கு 80 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. இதேபோன்று பிரட், பன் போன்றவற்றிற்கு முழு வரிவிலக்கு அளித்துள்ளதால், இவற்றின் விலையும் கணிசமாக குறைந்துள்ளதாக ராமநாபுரம் பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
விலை குறைந்த காரணத்தினால் ராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள ஒரு பேக்கரி கடையின் வாயிலில் கேக், ஸ்வீட், காரம் போன்றவற்றின் விலை குறைந்திருப்பதாக உரிமையாளர்கள் போர்டு வைத்துள்ளனர். இதனால் ,வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கேக் மற்றும் கார வகைகளை மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.