தேர்தல் பணிகளை சரிவர செய்ய வேண்டும் - நிர்வாகிகளுக்கு அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பரங்குன்றத்தில் தேர்தல் பணியை வேகப்படுத்தவில்லை என தலைமையில் இருந்து புகார்கள் வந்துள்ளதாக அமைச்சர் மூர்த்தி செயல்வீரா்கள் கூட்டத்தில் அதிருப்தி தெரிவித்து திமுக உடன்பிறப்புகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது... திருப்பரங்குற்றத்தில் என்ன நடக்கிறது... விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார். தேர்தல் பரப்புரையின் ஒருபகுதியாக திருப்பரங்குன்றம் கோவில் அருகே தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் மூர்த்தி பங்கேற்று தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் மூர்த்தி, பேப்பரில் செய்தி வரவேண்டும், தொலைக்காட்சியில் முகம் வரவேண்டும் என்பதற்கு எல்லாம் இங்கு வரவேண்டாம்,, இடைத்தேர்தலில் இறங்கி எப்படி வேலை பார்த்தோமோ, அதேபோன்று வேலை செய்ய வேண்டும் என்றார். 

தற்போது திருப்பரங்குன்றத்தில் திமுக நிர்வாகிகள் தேர்தல் பணியை சரிவர செய்வதில்லை என்றும், பணியை வேகப்படுத்தவில்லை என தலைமையில் இருந்து புகார் வந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

சரிவர வேலை பார்க்காத நிர்வாகிகளின் பட்டியலை தலைமைக்கு எழுதி கொடுப்பேன் என்றும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் மிரட்டும் தொணியில் அவர் பேசியது திமுக உடன்பிறப்புகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

நானும், மாவட்ட செயலாளர் மணிமாறன் ஒவ்வொரு எரியாவாக வரும்போது, அவரவர் பகுதியில் நிர்வாகிகள் இல்லை என்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதை எல்லாம் உரிமையாக சொல்லவில்லை எச்சரிக்கையாக சொல்கிறேன் என தெரிவித்ததால் செயல் வீரா்கள் மத்தியில் சலசலப்பு நிலவியது.

திருப்பரங்குன்றம் தேர்தல் பணிமனை கூட தனக்கு திருப்தியாக இல்லை என்று புளம்பிய அமைச்சர் மூர்த்தி, இதேநிலை நீடிக்க கூடாது என்று கடிந்து கொண்டார்.

நானும் மாவட்ட செயலாளரும் என்ன சொல்கிறோமோ அதைக் கேட்டு தேர்தல் பணியாற்றுமாறும், சும்மா எங்களோட ஒக்காந்து சீன் போடுற வேலை எல்லாம் இந்த தேர்தலில் நடக்காது என குறிப்பிட்டார்.
 
கூட்டம் நிறைவு பெற்று அமைச்சர் மூர்த்தி புறப்பட்டபோது, மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ-   தளபதியின் சகோதரி காந்திமதி, தனது சகோதரன் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை தாக்கியதாக முறையிட்டதுடன், தனது சகோதரன் கோ-தளபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார். 

தேர்தல் பணிமனை திறப்பு விழா மற்றும் செயல் வீரா்கள் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் மூர்த்தி நிர்வாகிகளை விமர்சித்து பேசியது, உடன் பிறப்புகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day