தேர்தல் ஆணையம், தெற்கு ரயில்வே ஏப்.10-க்குள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரயில்வே துறை ஊழியர்களுக்கும் தபால் வாக்கு செலுத்தும் வசதியை வழங்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கும், தெற்கு ரயில்வே-வுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மக்களவைத் தேர்தலில் ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு செலுத்தும் வசதியை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தித்தர உத்தரவிடும்படி, மதுரை கோட்ட கண்காணிப்பாளர் ராம்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தபால் வாக்குப்பதிவு தொடர்பாக தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பியதாகவும், அதற்கு ரயில்வே நிர்வாகம் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ரயில்வே துறை தரப்பில்தான் தவறு எனத் தெரிவித்த நீதிபதிகள், வரும் 10ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கும், தெற்கு ரயில்வே துறைக்கும் உத்தரவிட்டனர்.

Night
Day