தமிழகம்
மரம் மீது கார் மோதி விபத்து - 5 பேரும் உயிரிழந்த பரிதாபம்
கோவை அருகே செட்டிபாளையத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மது அருந்த...
தேனி மாவட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழையின்மையால் வைகை அணைக்கான நீர்வரத்து முற்றிலும் இல்லாமல் போனதால் 5 மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஆண்டிபட்டி அருகே நீர்பிடிப்பு பகுதிகளில் முற்றிலுமாக மழை இல்லாததாலும், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதாலும் வைகை அணைக்கான நீர்வரத்து அடியோடு சரிந்துள்ளது. நேற்று காலை வினாடிக்கு 39 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது தண்ணீர் வரத்து முற்றிலுமாக நின்று விட்டது. தற்போதைய நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 64 புள்ளி 52 அடியாகவும், அணையில் நீர் இருப்பு 4 ஆயிரத்து 525 மில்லியன் கன அடியாகவும் இருந்து வருகிறது.
கோவை அருகே செட்டிபாளையத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மது அருந்த...
விவசாயிகள் குறித்தும் நெல் கொள்முதல் குறித்தும் விளம்பர திமுக அரசு விளம்...