தொடர்ச்சியாக 51 தண்டால்... அசத்திய தமிழக ஆளுநர்... வியந்த பார்வையாளர்கள்....

எழுத்தின் அளவு: அ+ அ-

உலக யோகா தின கொண்டாட்டத்தை ஒட்டி தமிழகத்தில் ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் யோகாசனங்களை செய்தனர்.

சர்வதேச யோகா தினத்தையொட்டி மதுரையில் பிரமாண்டமாக நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பயிற்சி செய்தார். மதுரையில் பிரபல தனியார் பள்ளியில் 45 நிமிடங்களில் 8 வகையான 37 யோகாசனங்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ச்சியாக 51 தண்டால்கள் எடுத்தார்.

Night
Day