தென்காசி: ரயில்வே சுரங்கப்பாதையில் உள்ள நீருற்றுகளில் பெருக்கெடுக்கும் தண்ணீர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் உள்ள 3 நீரூற்றுகளில் இருந்து தண்ணீர் ஆறாக ஊற்றெடுப்பதால் அதனை முறையாக பயன்படுத்த வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாவூர்சத்திரம் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை அமைத்து தற்போது போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்த சுரங்கப்பாதையில் உருவாகியுள்ள 3 நீரூற்றுகளில் இருந்து தண்ணீர் ஆறாக ஊற்றெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர். எனவே வீணாகி வரும் ஊற்று நீரை முறையாக பயன்படுத்தி பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Night
Day