தென்காசி: கோரிக்கைகளை வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் சாலை மறியல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். சங்கரன்கோவில், புளியங்குடி, சிந்தாமணி, சுப்புலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் தங்கள் வீடுகளில் இருந்து பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் 50 சதவிகித கூலி உயர்வு, விடுமுறை சம்பளம், நாளொன்றுக்கு 500 ரூபாய் ஊதியம்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8 நாட்களாக தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் ஊதிய உயர்வு குறித்து விசைத்தறி உரிமையாளர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

varient
Night
Day