எழுத்தின் அளவு: அ+ அ- அ
தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
என்டிபிஎல் அனல் மின்நிலையத்தில் பெண்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பல ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் என்எல்சி நெய்வேலியில் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கியது போல நீண்டநாட்களாக பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து என்எல்சி மற்றும் என்டிபிஎல் நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. இதைத்தொடர்ந்து கடந்த 17ம் தேதி நள்ளிரவு முதல் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஒப்பந்த ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.