திருவள்ளூர்: சாலையில் சென்ற அரசு பேருந்தின் இருக்கை கம்பி உடைந்து விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தின் இருக்கை கம்பி உடைந்ததில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்தார். வங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் தனது உறவினரை அழைத்துக் கொண்டு வாங்கனூரிலிருந்து திருவள்ளூருக்கு அரசு பேருந்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது பேருந்து, வேகத்தடை மீது ஏறி இறங்கியதில், பேருந்தின் இருக்கையில் இருந்த கம்பி உடைந்தது. இதனால் இருக்கையில் அமர்ந்திருந்த கார்த்திகேயன், கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். பேருந்தில் இருந்தவர்கள் கார்த்திகேயனை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

varient
Night
Day