திருவள்ளூர் : புரட்சித்தாய் சின்னம்மா சார்பில் மக்களுக்கு குளிர்ச்சியான உணவு வழங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் ஆணைக்கிணங்க திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. கோடை வெயில் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் செயல்படுமாறு புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் கழக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி ஆர்.கே.பேட்டை அருகேயுள்ள எஸ்.வி.ஜி.புரத்தில் கழக நிர்வாகி முகுந்தன் சார்பில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டது. அதனை முன்னாள் அரசுக்கொறடா பி.எம்.நரசிம்மன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், மோர், உள்ளிட்ட குளிர்சத்து நிறைந்த உணவுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நடராஜன், ரஜினி, கல்விக்கரசி சேகர், ஹரி ராஜா, கந்தசாமி, பத்மநாபன், ஜெயராமன் நாயுடு, ராமுலு, முனுசாமி, ராஜேந்திர ராஜு, உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Night
Day