தமிழகம்
போத்தீஸ் ஜவுளி கடைகளில் 6-வது நாளாக ஐடி சோதனை
தமிழ்நாடு முழுவதும் உள்ள போத்தீஸ் ஜவுளிக் கடைகள் மற்றும் உரிமையாளர்கள் வ...
திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான பாமகவினர் மற்றும் வன்னிய சங்கத்தினர் பேரணியாக வந்து நாயுடுமங்கலம் கூட்டு சாலை சந்திப்பில் அக்னி கலசத்தை நிறுவினர். நாயுடு மங்கலத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்றபோது, வன்னியர் சங்கம் சார்பில் 1989-ல் வைக்கப்பட்ட ‘அக்னி கலசம்’ அகற்றப்பட்டது. பேருந்துநிறுத்தம் கட்டப்பட்ட பின், அங்கு மீண்டும் அக்னி கலசம் வைக்க பலகட்ட போராட்டங்களை நடத்திய பாமகவினர், கடந்த 10ம் தேதி அக்னி கலசத்தை அங்கு நிறுவினர். அனுமதியின்றி வைக்கப்பட்டதாக கூறி அக்னி கலசம் அங்கிருந்து அகற்றப்பட்ட நிலையில், இன்று ஏராளமான பாமகவினர் மற்றும் வன்னிய சங்கினர் திரண்டு பேரணியாக வந்து நாயுடுமங்கலம் கூட்டு சாலை சந்திப்பில் அக்னி கலசத்தை மீண்டும் நிறுவினர். இதனால் நாயுடுமங்கலம் பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள போத்தீஸ் ஜவுளிக் கடைகள் மற்றும் உரிமையாளர்கள் வ...
தமிழ்நாடு முழுவதும் உள்ள போத்தீஸ் ஜவுளிக் கடைகள் மற்றும் உரிமையாளர்கள் வ...