தமிழகம்
பகுதி நேர ஆசிரியர்கள் 2வது நாளாக போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் பகுதி நேர ஆசிர...
திருப்பூர் மாவட்டம் உழவர் சந்தையில் விவசாயியை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்து விரட்டிய அதிகாரியை பணியிடை நீக்க செய்யக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவிநாசிபாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி கன்னிமுத்து என்பவர், திருப்பூர் உழவர் சந்தையில் காய்கறி விற்பனை செய்து வருகிறார். வழக்கம்போல் காய்கறி விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த கன்னிமுத்து, அங்கு வந்த உழவர் சந்தை நிர்வாக அலுவலர் மணிவேலிடம், விவசாயிகளை விட வியாபாரிகள் அதிகளவில் காய்கறி விற்பனை செய்தவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார். இதனால், ஆத்திரமடைந்த அவர் கன்னிமுத்துவை சரமாரியாக தாக்கினார். இந்நிலையில், விவசாயை தாக்கிய மணிவேலை பணியிடை நீக்க செய்யக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் பகுதி நேர ஆசிர...
தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளில் நாளை முதல் தமிழ்நாடு அரசுப் ப?...