திருப்பூரில் பள்ளி முன்பு டன் கணக்கில் குப்பைகளை கொட்டிய தூய்மை பணியாளர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் அரசு பள்ளி முன்பு மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் குப்பைகளை கொட்டிச் சென்றதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியுற்றனர். 

அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் முன்புறம் மாநகராட்சியில் சேகரிக்கப்பட்ட குப்பைகள், இறைச்சிக் கழிவுகளை ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கொட்டிவிட்டு சென்றுள்ளனர். குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதால், பள்ளிக்கு வரும் மாணவர்களும், பொதுமக்களும் கடும் அவதிக்கு ஆளாகினர். இதனால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை கையாள்வதில் சரியான திட்டமிடல் இல்லாததால், துப்புரவு பணியாளர்கள் ஆங்காங்கே சாலையோரங்களில் குப்பைகளை கொட்டிவிட்டுச் செல்கின்றனர். தற்போது அரசுப் பள்ளி முன்பு கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றாவிடில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  

Night
Day