எழுத்தின் அளவு: அ+ அ- அ
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறித்து அவதூறாகப் பேசிய திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில் கழக நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர்.
அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறித்து, திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் அவதூறாகப் பேசியிருப்பது கழக தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியாத்தம் குமரன் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யக் கோரி தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் கழக நிர்வாகிகள் புகார் மனு அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்தில், கழக நிர்வாகிகள் RTG குமரன், பாறை கண்ணன், கணேசன், சுருளி, ஸ்ரீராம், பழனி குமார் உட்பட பலர் புகார் மனு அளித்தனர்.
பெண் என்றும் பாராமல் புரட்சித்தாய் சின்னம்மாவை அவதூறாகப் பேசி வீடியோ வெளிட்ட குடியாத்தம் குமரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வீடியோ வெளியிட்ட யூடியூப் சேனலை தடைசெய்ய வேண்டும் என்றும் புகார் மனுவில் கழக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.