எழுத்தின் அளவு: அ+ அ- அ
புதுக்கோட்டையில் சாலை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி திமுக எம்எல்ஏவை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட அன்னம்மாள்புரம் மற்றும் ஸ்ரீநகர் பகுதிகளில் ரேஷன் கடை கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை திமுக எம்எல்ஏ முத்துராஜா, மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் மற்றும் துணை மேயர் லியாகத் அலி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, குன்னவயல், ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் தெருவிளக்கு, சாலை வசதி செய்து தர கோரி பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என குற்றம்சாட்டி, எம்எல்ஏ முத்துராஜாவை முற்றுகையிட்டனர்.
தொடர்ந்து பொதுமக்களின் வாயை அடைப்பதற்காக மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் பணம் கிடைக்கிறதா என்று திமுக எம்எல்ஏ கேட்டதற்கு அந்த பணமும் வரவில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விட்டால் போதும் என திமுக எம்எல்ஏ முத்துராஜன் ஓட்டம் பிடித்தார். இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.