திமுகவின் ஊழல் ஆட்சியில் கேள்விக்குறியான தமிழகத்தின் வளர்ச்சி - பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கடும் விமர்சனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

முதலமைச்சர் ஸ்டாலினின் ஊழல் ஆட்சியால் தமிழகத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், அரியலூரில் நடைபெற்ற பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் அக்கட்சி தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழர்களின் கலாச்சாரத்தை திமுக அழித்து வருவதாகவும், மு.க.ஸ்டாலினின் ஊழல் ஆட்சியில், தமிழகத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளதாகவும் குற்றம்சாட்டினார். தமிழர்களின் பண்பாடு, சனாதனத்தை பாஜக காத்து வருவதாகவும், ஆனால் திமுக, காங்கிரஸ் அதனை அழிக்க முயற்சி செய்து வருவதாகவும் ஜே.பி.நட்டா சாடினார். இந்தியா கூட்டணியில் உள்ள பாதி தலைவர்கள் ஜெயிலிலும், மீதி தலைவர்கள் பெயிலிலும் உள்ளதாக விமர்சித்த ஜே.பி.நட்டா, நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் உலகின் 3வது பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்றும் உறுதியளித்தார்.

varient
Night
Day