திமுகவினரின் அடாவடிகள் அதிகரித்துள்ளன - புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் தலைவிரித்தாடுவதாகவும், மக்கள் நலன் கருதி திமுக அரசு, அதனை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி, உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை, கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர் சந்திப்பின் போது, கள்ளச்சாராயம் மற்றும் போதை கலாச்சாரம் திமுக ஆட்சியில் தலைவிரித்தாடுவதாக புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டினார். 

திமுகவினர் பல இடங்களில் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், ஆட்சியை நடத்துவோர் தங்கள் கட்சிக் காரர்களை அடக்கி வைக்க வேண்டும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்தார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் சின்னம்மா வலியுறுத்தினார்.

Night
Day