தமிழகம்
பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் செல்போன்கள் ஹேக் - புகார்
பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் செல்போன்கள...
திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலகுண்டு மஹா பரமேஸ்வரி மாரியம்மன் கோயிலில் மண்டகப்படி கேட்டு பட்டியலின மக்கள் ஆயிரத்து 500 பேர் சாலைமறியலில் ஈடுபட்டனர். மஹா பரமேஸ்வரி மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவில் அனைத்து சமுதாயத்தினருக்கும் மண்டகப்படி உள்ளதாகவும், பட்டியலின மக்களுக்கு கடந்த 30 வருடங்களாக மண்டகப்படி மறுக்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பட்டியலின மக்கள், இந்து அறநிலையத்துறைக்கு எதிராக போராட்டம் நடத்தியதை அடுத்து கோரிக்கை நிறைவேற்றப்படுமென அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாததை அடுத்து, ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வத்தலகுண்டு - பெரியகுளம் சாலையில் போராட்டம் நடத்தினர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் செல்போன்கள...
உத்தரகாண்டில் மேக வெடிப்பால் கொட்டித்தீர்த்த கனமழையால் ஏற்பட்ட பெரும் ?...