தருமபுரி: திமுக பிரமுகர் உதவியுடன் பேருந்து நிலையத்தில் கடைகள் அமைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நகர பேருந்து நிலையத்தை திமுக பிரமுகர் உதவியுடன் தனிநபர்கள் ஆக்கிரமித்து கடைகள் அமைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாலக்கோடு நகர பேருந்து நிலையத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து நடைபெறுவதால் எப்போதும் மக்கள் கூட்டத்துடன் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் தனிநபர்கள் சிலர், செயல் அலுவலரின் அனுமதியின்றி திமுக பேரூராட்சித் தலைவர் முரளியிடம் பணம் கொடுத்துவிட்டு,பேருந்து நிலையத்தில் கடைகள் அமைத்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே விளம்பர திமுக அரசு ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி அந்த இடத்தில் நிழற்கூடங்களை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

varient
Night
Day