தருமபுரி: ஓட்டு வீட்டில் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தருமபுரி மாவட்டம் பெரியார் மன்றம் அருகே உள்ள ஓட்டு வீட்டில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. எஸ்.பி. ரோடு சாலையில் உள்ள அஞ்சு காரன்  தெரு பகுதியில், உமா என்பவருக்கு சொந்தமான ஓட்டு வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டில், திடீரென மின்கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வீரர்கள், தீயை போராடி அணைத்தனர். 

varient
Night
Day