தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் 2வது நாளாக ED சோதனை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் துணை முதலமைச்சர் உதயநிதிக்கு நெருக்கமான திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறையினர் 2வது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடும் பெரும்பாலான படங்களை, dawn பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தனுஷின் இட்லி கடை, சிம்புவின் 49வது திரைப்படம், சிவகார்த்திகேயனின் பராசக்தி உள்ளிட்ட படங்களை Dawn பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

இந்நிலையில், Dawn பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆகாஷ் பாஸ்கரனின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 2வது நாளாக நடைபெற்று வரும் சோதனையில், குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை தயாரிப்பதற்கான முதலீடு எங்கிருந்து வந்தது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Night
Day