தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6 கோடியே 23 லட்சம் பேர் - தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் மொத்த 6 கோடியே 23 லட்சத்து 26 ஆயிரத்து 901 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னையில் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் பணியில் 7 லட்சம் அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், 648 நட்சத்திர வேட்பாளர் பரப்புரை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் சத்யபிரதா சாகு தெரிவித்தார். 

தமிழகத்தில் மொத்தம் 68 ஆயிரத்து 144 வாக்குசாவடிகள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்த அவர், 39 வாக்கு எண்ணும் மையங்களும் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். 117 தேர்தல் பார்வையாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுவரை உரிய ஆவணங்களின்றி 33 கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றி உள்ளதாக சத்யபிரதா சாகு தெரிவித்தார். 

varient
Night
Day