தமிழகத்தில் குட்கா, பான் மசாலா போன்ற பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை

எழுத்தின் அளவு: அ+ அ-

 தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் விநியோகம் செய்ய மேலும் ஓராண்டுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நிக்கோடின் மற்றும் புகையிலை அடிப்படையிலான குட்கா, பான் மசாலா, மெல்லும் புகையிலைப் பொருட்கள் உள்ளிட்டவற்றிற்கு கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டது. அந்த தடையை ஆண்டுதோறும் தமிழக அரசு நீட்டித்து வருகிறது. அதன்படி தற்போது தமிழக அரசு விடுத்துள்ள அறிவிப்பில், தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை, விநியோகம், பதுக்கல் ஆகியவற்றுக்கான தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இந்த தடை வரும் 2025-ம் ஆண்டு மே 23-ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day