வடகிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயலாக வலுப்பெற்று முதலில் மேற்கு திசையிலும், அதற்கடுத்து மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து அதற்கடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவடைய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், திருவள்ளூர், நாகை, தஞ்சை, சேலம், நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுத்துறை, திருவாரூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தேனி, திண்டுக்கல், மதுரை சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் 5ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.